செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 8 ஆகஸ்ட் 2020 (12:50 IST)

புதிய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் -பாரதிராஜவுக்கு கமல் ஆதரவு

தமிழ் சினிமாவில் புதிய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கியுள்ள இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு நடிகரும் தயாரிப்பாளருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் என்ற பெயரில் ஒரு அமைப்பு இருந்த் நிலையில், இதில் 1200க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இந்தச் சங்கத்திற்கு விரையில் தேர்தல் வரவுள்ளது. இந்நிலையில், அம்மா கிரியேசன்ஸ் டி.சிவா என்பவர் தலைமையில் ஒரு அணியும்,  ஸ்ரீதேனாண்டால் பிலிம்ஸ் முரளி தலைமையில் ஒரு அணியும் தேர்தலில் போட்டியிடவுள்ளன.

இந்நிலையில் தற்போது உள்ள சங்கத்தில் படம் தயாரிப்பவர்கள் சுமார் 200 பேர் உள்ளதாகவும்  அவர்கள் படத்தயாரிப்பு தொழிலில் ஒருந்து விலகியுள்ள நிலையில் அவர்களுக்காகவே புதிய சங்கம் ஒன்றை உருவாகவுள்ளனர். இது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான கமல்ஹாசன் பாரதிராஜாவின் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதையடுத்து கமலின் வாழ்த்துக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பாரதிராஜா ‘முடக்கத்தை உடைத்து முயற்சி எடுக்கையில் முன்னேரின் கமல்ஹாசன் வழிமொழிதல் அகமகிழ்வைத் தருகிறது. மூத்ததொரு கலைஞனின் "தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம்" காலத்தின் தேவையென்ற புரிதல்போல தமிழ் சினிமாவின் ஆரோக்கியத்திற்காக 'நம்' தொடக்கம் போராடி நிரூபிக்கும் நன்றிகள்’ எனத் தெரிவித்துள்ளார்.