செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (14:58 IST)

பேத்தி இயக்கத்தில் குறும்படத்தில் நடித்த பாரதிராஜா!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பாரதிராஜா தற்போது நடிகராகவும் கலக்கி வருகிறார். கடைசியாக அவர் மீண்டும் முதல் மரியாதை என்ற திரைப்படத்தை இயக்கினார். அதன் பின்னர் இயக்கத்துக்கு ஒரு இடைவெளி விட்டுவிட்டு இப்போது நடிப்பில் முழுக்கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் தன் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் மார்கழி திங்கள் என்ற படத்தில் நடித்தார். அந்த படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆனாலும் போதுமான கவனத்தை ஈர்க்கவில்லை.

இந்நிலையில் இப்போது பாரதிராஜா தன்னுடைய பேத்தி மதிவதனி மனோஜ் இயக்கத்தில் ஒரு குறும்படத்தில் நடித்துள்ளார். மதிவதனி படிக்கும் பள்ளிக்காக இந்த குறும்படம் எடுக்கப்பட்டுள்ளதாம். தன்னை சிறப்பாக நடிக்க வைத்து வேலை வாங்கியதாக பேத்தியைப் பாராட்டியுள்ளார். மேலும் அவருக்கு சால்வை போத்தி பாராட்டியுள்ளார்.