1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 16 நவம்பர் 2021 (13:13 IST)

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் கண்ணம்மா என்ற கேரக்டரில் நடித்து வந்த ரோஷினி அந்த சீரியலில் இருந்து விலகி விட்டதை அடுத்து ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் 
 
பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் தான் ரோஷினிக்கு மிகப்பெரிய அளவில் புகழ் கிடைத்தது என்பதும் இந்த புகழின் அடிப்படையில் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்ததால் பாரதிகண்ணம்மா சீரியல் இருந்து விலக இருப்பதாக கூறப்பட்டது
 
நேற்று முதல் அவருடைய கேரக்டரில் வினுஷா என்பவர் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எதிர்பாராத காரணத்தினால் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலக நேரிட்டதாகவும் இது ரசிகர்களின் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் உங்களுடைய அன்பும் ஆதரவும் தொடர்ந்து வேண்டுமென்றும் வீடியோ ஒன்றில் ரோஷினி தெரிவித்துள்ளார்