"காத்துவாக்குல ரெண்டு காதல்" ஷூட்டிங்கில் இணைந்தார் சமந்தா - வீடியோ!
விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே நானும் ரவுடிதான் இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடிக்க உள்ளனர் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்தது. இந்த படத்தில் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தில் தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லை எனக் கருதியதால் அவர் நடிக்க தயங்கியதாக சொல்லப்பட்டது. ஆனால் அதன் பிறகு அந்த கதாபாத்திரத்துக்கு விக்னேஷ் சிவன் காட்சிகளை அதிகப்படுத்தினார். இந்நிலையில் இப்போது சமந்தா கர்ப்பமாக இருப்பதால் விரைவாக அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினால் நடிப்பதாக தெரிவித்திருந்தார்.
எனவே தற்போது அவரது காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்படவுள்ளது. இன்று முதல் இந்த படப்பிடிப்பு துவங்கியுள்ள நிலையில் சமந்தா படப்பிடிற்காக மேக்கப் போட்டுக்கொண்டு ரெடியாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது, அவருக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் பூங்கொத்து கொடுத்து வரவேற்ற வீடியோ இதோ...