செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 14 அக்டோபர் 2020 (16:58 IST)

100 மில்லியன் கிளப்பில் இணைந்த பாகுபலி படப் பாடல்….ரசிகர்கள் கொண்டாட்டம்!

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாலிபலி. இப்படத்தை ராஜமௌலி இயக்கினார்.  இதில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி உலக அளவில் வசூலில் சாதனை படைத்தது.

இப்படத்தில் மரகதமணி இசையமைப்பில் கார்க்கி எழுதிய பாடலை வைக்கம் விஜயலட்சுமி,  மரகதமணி ஆயோர் பாடிய  சிவ சிவாய போற்றி என்ற பாடல் தற்போது 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

தெலுங்கில் இப்பாடலுக்கு ஒன்றரைக் கோடி பார்வையாளர்களைக் கடந்தாலும் தமிழில் சுமார் 10 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதனால் இப்படக்குழுவினார் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.