செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 15 பிப்ரவரி 2021 (08:43 IST)

அக்‌ஷய் குமார் படத்தின் ரீமேக்கில் கிருஷ்ணா – பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

அக்‌ஷய் குமார் நடித்துள்ள பெல்பாட்டம் படத்தின் ரீமேக்கில் தமிழில் கிருஷ்ணா நடிக்க உள்ளார்.

கடந்த ஆண்டு கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான பெல்பாட்டம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதையடுத்து அந்த படம் பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்தியில் அக்‌ஷய் குமார் பெல்பாட்டம் என்ற பெயரிலேயே ரீமேக் செய்து வருகிறார். இந்நிலையில் தமிழில் இப்போது அதே பெயரில் கிருஷ்ணா நடிப்பில் கழுகு இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் உருவாக உள்ளது.

நேற்று கிருஷ்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த படத்துக்கு இயக்குனராக சத்யசிவா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.