செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 3 பிப்ரவரி 2021 (08:40 IST)

மீண்டும் வெளிநாட்டுப் படத்தின் ரீமேக்கில் அமீர்கான்…. தமிழ் இயக்குனருடன் ஆலோசனை!

நடிகர் அமீர்கான் அடுத்ததாக ஸ்பெயின் மொழியில் வெளியான காம்பியோனெஸ் என்ற படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

1994 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான பாரஸ்ட் கம்ப் படம் ஆஸ்கர்களை அள்ளியது. அதுமட்டுமில்லாமல் இன்று வரை உலக சினிமா ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பெற்றுள்ள படமாக உள்ளது.  இந்த படத்திஅ 25 ஆண்டுகள் கழித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் லால் சிங் சட்டா எனும் பெயரில் ரீமேக் செய்து நடித்து வருகிறார்.

இந்த படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அமீர்கானின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இந்நிலையில் அடுத்த படமும் ஒரு வெளிநாட்டுப் படத்தின் ரீமேக்தான் என சொல்லப்படுகிறது. ஸ்பெயினில் 2018 ஆம் ஆண்டு வெளியான காம்பியோனெஸ் எனும் படத்தை ரீமேக் செய்து நடிக்க அமீர்கான் இயக்குனர் ஆர் எஸ் பிரசன்னாவோடு ஆலோசனை செய்து வருகிறாராம். பிரசன்னா தமிழில் வெளியான கல்யாண சமையல் சாதம் படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது,