வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 11 பிப்ரவரி 2021 (21:22 IST)

முன்னணி நடிகரின் போஸ்டருக்கு பீர் அபிஷேகம் ...வைரலாகும் வீடியோ

சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா இவருக்கு ஆண் மற்றும் பெண் ரசிகைகள் அதிகம்.

இவர் நேரடியாகத் நடித்த டியர் காம்ரேட், நோட்டா,வேர்ல்ட் பேமஸ் லவ்வர் போன்ற படங்கள் தமிழில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில், இன்று விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகவுள்ள லைகர் படத்தின் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது.

இப்படத்தைப் பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கவுள்ளார். இப்படம், இந்தி, தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.

இன்று இப்படத்தின் போஸ்டருக்கு ரசிகர்கள் பீர் அபிஷேகம் செய்துள்ளனர். இது குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதுகுறித்து விஜய் தேவரகொண்டா கூறியுள்ளதாவது : என்னைப் போன்று சிலர் கடின உழைப்பும் ஆர்வம் இவற்றால் இங்கிருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.