வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 25 மார்ச் 2022 (15:22 IST)

பீஸ்ட் டீசரா? டிரைலரா?..... எப்போது வெளியாகும்? – வெளியான தகவல்!

பீஸ்ட் படத்தின் டிரைலர் மட்டுமே வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் ஏபரல் 14 புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 13 ஆம் தேதி ரிலிஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் ஏப்ரல் 14 ல்  இந்தியா முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகும் கேஜிஎப் 2 படமும்  ரிலிஸ் ஆகிறது. இதனால் இரண்டு படங்களுக்கும் போதுமான திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் எழலாம்.

ஏற்கனவே பீஸ்ட் படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி ஹிட்டாகியுள்ளன. அடுத்த கட்டமாக டீசர் மற்றும் டிரைலர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் அதுபற்றிய ஒரு தகவல் கசிந்துள்ளது. அதில் பீஸ்ட் படத்தின் டீசர் வெளியாகாது என்றும் டிரைலர் மட்டும் ஏப்ரல் முதல்வாரத்தில் ரிலீஸ் ஆகும் என்றும் சொல்லப்படுகிறது.