வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 25 மார்ச் 2022 (13:07 IST)

புனித் ராஜ்குமாருக்கு டாக்டர் பட்டம் !

கன்னடத்தில் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற நடிகர் புனித் ராஜ்குமார். புனித் ராஜ்குமார்(46) கடந்த ஆண்டு திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

புனித்ராஜ்குமார் கடைசியாக நடித்த படம் ஜேம்ஸ் சமீபத்தில் வெளியாகி வசூலில் சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், மைசூர் பல்கலைக்கழகம்  102 வது  பட்டமளிப்பு விழாவில் புனித் ராஜ்குமாருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இப்படத்தை அவரது மனைவி அஸ்வினி பெற்றுக்கொண்டார்.  இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தீயுள்ளது.