1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 24 மார்ச் 2022 (09:05 IST)

பீஸ்ட் ட்ரெய்லர் ரிலிஸ் தேதி…? – ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!

விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் தேதி குறித்த தகவல்கள் கசிந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் பீஸ்ட் படத்தின் அரபி குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி பெரும் ட்ரெண்டாகியுள்ளது.

ஏப்ரல் 13ம் தேதி அன்று பீஸ்ட் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் தீவிரமாக காத்து கிடக்கின்றனர். இந்நிலையில் ஏப்ரல் 1ம் தேதி அன்று மாலை ட்ரெய்லர் வெளியாகலாம் என சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிந்து வருகின்றன. இதனால் குஷி அடைந்துள்ள ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பீஸ்ட் குறித்த ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.