திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 17 மார்ச் 2022 (09:00 IST)

முதல் முதலாக பீஸ்ட் படத்தில் களமிறங்கிய நெல்சன்… ப்ரோமோவில் இதைக் கவனித்தீர்களா?

விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான ஜாலியோ ஜிம்கானா ப்ரோமோ நேற்று வெளியானது.

 ‘பீஸ்ட்’ படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக்குத்து சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆன நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் வரும் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாலியோ ஜிம்கானா என தொடங்கும் அந்த பாடலின் 30 செகண்ட் ப்ரோமோ நேற்று வெளியானது.

கலர்புல்லான பார்ட்டி சாங்காக உருவாகியுள்ள அந்த பாடலில் முதல் முறையாக இயக்குனர் நெல்சன் திரையில் தோன்றியுள்ளார். அவர் மட்டும் இல்லாமல் இசையமைப்பாளர் அனிருத்தும் திரையில் தோன்றியுள்ள அந்த பாடலை பார்க்க இப்போதே ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள்.