1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 11 ஏப்ரல் 2022 (14:13 IST)

கேஜிஎப் 2 வால் தள்ளிவைக்கப்பட்ட மற்றொரு பாலிவுட் படம்… கடைசி நேரத்தில் அறிவிப்பு!

ஷாகித் கபூர் நடிப்பில் உருவான ஜெர்ஸி திரைப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

நானி நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான திரைப்படம் ஜெர்ஸி. 36 வயதில் ஒரு கிரிக்கெட் வீரர் இந்திய அணியில் இடம்பிடிக்கப் போராடுவதே அந்த படத்தின் கதை. வழக்கமான ஸ்போர்ட்ஸ் ட்ராமா படங்களுக்கு மத்தியில் வித்தியாசமாக அமைந்த இந்த படம் வெற்றி பெற்றது. அதையடுத்து பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் நடிப்பில் இந்தியில் ரீமேக் செய்யப்ப்பட்டுள்ளது. தெலுங்கில் இயக்கிய இயக்குனர் கௌதம் தின்னமுரியே இந்தியிலும் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இந்த படம் இந்தியா முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த தேதியில் கேஜிஎப் 2 படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது ரிலீஸுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஜெர்ஸி திரைப்படம் ஒருவாரம் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேஜிஎப் 2 வுக்கு ரசிகர்கள் மத்தியில் உள்ள எதிர்பார்ப்புக் காரணமாகவே ஜெர்ஸி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.