செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 28 டிசம்பர் 2019 (18:17 IST)

அமிதாப், அஜித் வரிசையில் பவன் கல்யாண் – பிங்க் ரீமேக்கின் மூலம் ரீ எண்ட்ரி !

பிங்க் படத்தின் ரீமேக் தமிழில் வெளியானதை அடுத்து இப்போது தெலுங்கிலும் பவன் கல்யாண் நடிப்பில் ரீமேக் ஆக இருக்கிறது.

சமீபத்திய ஆண்டுகளில் வெளியான பெண்ணிய திரைப்படங்களில் மிக முக்கியமானது பிங்க் திரைப்படம். இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்த அந்த திரைப்படம் தமிழில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரிமேக் செய்யப்பட்டது. ஹெச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்த இந்த திரைப்படம் தமிழிலும் பெரிய வெற்றியை பெற்றது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித் படத்துக்கு பெண்கள் ஆதரவு இந்த படம் மூலம் கிடைத்தது.

இந்நிலையில் இப்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யான் இந்த படத்தின் ரீமேக்கில் நடிக்க விரும்புவதாக சொல்லப்படுகிறது. அரசியலுக்காக சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த பவன் மீண்டும் படத்தில் நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழில் தயாரித்த போனி கபூரே வேறு ஒரு முக்கிய தயாரிப்பாளரோடு இணைந்து இந்த படத்தையும் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.