1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 24 டிசம்பர் 2019 (18:01 IST)

100M வியூஸை கடந்த கண்ணான கண்ணே லிரிக்கல் வீடியோ!!

விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே லிரிக்கல் வீடியோ 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. 
 
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக இணைந்து நடித்து கடந்த பொங்கல் தினத்தில் வெளியான படம் விஸ்வாசம். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இப்படம் விவசாயம் , தந்தை - மகள் பாசம் உள்ளிட்டவற்றை மைய கருவாக கொண்டு வெளிவந்தது. 
 
இந்த படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார். அனைத்து பாடல்களும் சிறப்பாக அமைந்திருந்த நிலையில் அப்பா - மகள் பாசத்தை வெளிப்படுத்தும் கண்ணான கண்ணே பாடல் அனைவரையும் கவர்ந்தது. இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியிருந்தார். 
இந்நிலையில் இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் அஜித் ரசிகர்கள் டிவிட்டரில் #Viswasam, #100MLoveForKannaanaKanney ஆகிய ஹேஷ்டேக்குகளை உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர்.