திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 9 அக்டோபர் 2023 (11:51 IST)

பிக்பாஸ் வீட்டில் இருந்து திடீரென வெளியேறிய இன்னொரு போட்டியாளர்.. அதிர்ச்சி தகவல்..!

kamal biggboss
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரமே ஆகி உள்ள நிலையில் முதல் வாரமே அனன்யா என்ற போட்டியாளர்  எலிமினேஷனில் குறைந்த வாக்குகள் அடிப்படையில் நேற்று வெளியேற்றப்பட்டார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில்  இன்னொரு போட்டியாளர் அவராகவே வெளியேறிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பவா செல்லத்துரை நேற்று தன்னால் இந்த நிகழ்ச்சியில் தொடர முடியவில்லை என்று பிக் பாஸ் இடம் தெரிவித்தார். ஆனால் அவரை பிக் பாஸ் சமாதானப்படுத்தி இருக்க வைத்தார்.

இந்நிலையில் இன்று அவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் இனிமேலும் தன்னால் இந்த போட்டியில் தொடர முடியாது என்றும் கூறியதை அடுத்து அவர் வெளியேற பிக் பாஸ் அனுமதி கொடுத்துவிட்டார்.  இதனை அடுத்து அவர் சக போட்டியாளரிடம் கூட சொல்லாமல் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார்  

கடந்த ஒரு வாரத்தில் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு பவா செல்லத்துரை நல்ல அறிவுரை கூறினார் என்பதும் கதைகள் கூறி  எல்லோருக்கும் சில அரிய தகவல்களை கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் வெளியேற்றப்பட்டது  பிக் பாஸ் பார்வையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran