வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 6 அக்டோபர் 2023 (13:16 IST)

நீங்க யாரு எனக்கு புத்தி சொல்ல..? குட்டி வனிதாவை சீண்டி விட்ட விசித்திரா!

Bigg Boss Jovika
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் விஜய் டிவியில் தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இன்று வீ சித்ராவுக்கும் வனிதா மகள் ஜோதிகாவுக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது.


 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த போதே ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக் கொண்டபோது ஜோவிகா கல்லூரி செல்லாதது குறித்து பேச்சுக்கள் எழுந்தது. பலரும் அவர் கல்லூரிக்கு சென்று படிக்க வேண்டும் என்றும் படிப்புதான் முக்கியம் என்றும் அவருக்கு பாடம் எடுத்தனர். அப்போதே அப்செட் ஆன ஜோவிகா இதைப் பற்றி பேச வேண்டாம் என கூறிவிட்டார்.

இந்நிலையில் இன்று நடந்த வாக்குவாதத்தில் விசித்திரா படிப்பு அவசியமானது, அடிப்படை கல்வியாவது கற்க வேண்டும் என்று பேச, அது ஜோவிகாவை எரிச்சல்படுத்தியது. இதனால் வெகுண்டெழுந்த ஜோவிகா ”என் படிப்பை பற்றி நீங்கள் பேச வேணாம். படிக்காமலேயே எவ்வளவோ பேர் எவ்வளவோ விஷயங்கள் சாதிக்கிறாங்க. கல்லூரி போய் படிப்பது மட்டும் தான் படிப்பு என்று இல்லை. எவ்வளோ வகைகளில் படிக்க முடியும்” என்று பேச வர விசித்ரா அதை மறுத்து பேசிக் கொண்டே இருக்க, கடுப்பான ஜோவிகா ”நான் பேசிட்டு இருக்கேன்ல” என்று ஆக்ரோஷமாக கத்தினார். இதனால் விசித்ரா சைலண்ட் ஆனார்.

முந்தைய சீசன்களில் பிக்பாஸில் கடுமையான கன்டெஸ்ட்ண்டாக இருந்தவர் வனிதா. அவரது மகளும் அதே போல கட்ஸுடன் தைரியமாக எதிர்த்துப் பேசுவதும் நடப்பதுமாக இருப்பது ஹவுஸ் மேட்ஸையே கொஞ்சம் அவர் மேல் பயம் கொள்ள செய்துள்ளது. முன்ன வாழ்க்கை இப்படித்தான் கூல் சுரேஷ் ஜோவிகாவை என் மகள் என்று பேசிய போதும் ”நான் உங்கள் மகள் கிடையாது” என்று அவரிடம் கடுமையாக பேசினார் ஜோதிகா என்பது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K