புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 27 ஜனவரி 2022 (15:13 IST)

தமிழகத்தில் ரிலீஸ் ஆகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா' படம்

தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் அகண்டா. தெலுங்கில் வெளியாகி பெரும் வசூலை சாதித்த இந்த படம் சமீபத்தில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில் அதிகம் பார்க்கப்பட்ட படமாக அகண்டா சாதனை படைத்துள்ளது.

 இந்நிலையில் தமிழகத்தில் இந்த படத்திற்கு இருக்கும் வரவேற்பு காரணமாக நாளை இந்த படம் தமிழகத்தில் ரீரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

பாலகிருஷ்ணாவின் அகண்டா  படம் வெளியாகி இன்றுடன் 50 நாட்கள் ஆகும் நிலையில், இப்படம் நாளை முதல் தமிழ் நாட்டில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம்  50 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.