1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 9 டிசம்பர் 2021 (11:08 IST)

அகாண்டா பிளாக்பஸ்டர் ஹிட்…. ரீமேக்கில் அக்‌ஷய் குமார்!

பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான அகாண்டா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இந்தியில் ரீமேக் செய்யும் வேலைகள் நடந்துவருவதாக சொல்லப்படுகிறது.

தெலுங்கு நடிகர் என் டி ஆரின் மகனான பாலகிருஷ்ணா 60 வயதுக்கு மேலும் கதாநாயகனாக நடித்து வருகிறார். பெரும்பாலான அவரின் படங்கள் தோல்வி அடைந்து கேலி செய்யப்படாலும், அவர் நடிப்பதை விட்ட பாடில்லை. இந்நிலையில் இப்போது அவர் சிவபக்தராக அஹோரியாக நடித்துள்ள அகாண்டா படம் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியானது.

விமர்சன ரீதியாக இந்த படம் மோசமான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் சோடை போகவில்லையாம். நான்கே நாட்களில் 53 கோடி ரூபாயை ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வசூலித்துள்ளதாம். சமீபகாலங்களில் வெளியான படங்களில் மிகப்பெரிய வசூலைக் கொடுத்த படமாக அகாண்டா உருவாகியுள்ளது.

இந்த வெற்றியால் அகாண்டா படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்யும் வேலைகள் தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. வழக்கமாக ரீமேக் படங்களின் நாயகன்களாக அறியப்படும் அக்‌ஷய் குமார் அல்லது அஜய் தேவ்கான் ஆகியவர்களில் ஒருவர் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது.