1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 7 டிசம்பர் 2021 (10:13 IST)

வசூலில் சாதனைப் படைக்கும் பாலகிருஷ்ணாவின் அகாண்டா!

பாலகிருஷ்ணா நடிப்பில் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியான அகாண்டா திரைப்படம் மிகப்பெரிய வசூலை அளித்து வருகிறது.

தெலுங்கு நடிகர் என் டி ஆரின் மகனான பாலகிருஷ்ணா 60 வயதுக்கு மேலும் கதாநாயகனாக நடித்து வருகிறார். பெரும்பாலான அவரின் படங்கள் தோல்வி அடைந்து கேலி செய்யப்படாலும், அவர் நடிப்பதை விட்ட பாடில்லை. இந்நிலையில் இப்போது அவர் சிவபக்தராக அஹோரியாக நடித்துள்ள அகாண்டா படம் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியானது.

விமர்சன ரீதியாக இந்த படம் மோசமான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் சோடை போகவில்லையாம். நான்கே நாட்களில் 53 கோடி ரூபாயை ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வசூலித்துள்ளதாம். சமீபகாலங்களில் வெளியான படங்களில் மிகப்பெரிய வசூலைக் கொடுத்த படமாக அகாண்டா உருவாகியுள்ளது.