திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 3 ஏப்ரல் 2023 (09:50 IST)

பாலகிருஷ்ணாவின் அடுத்த படத்தில் நான்கு கதாநாயகிகள்!

பாலகிருஷ்ணா நடிப்பில் சங்கராந்தியை முன்னிட்டு வீரசிம்மா ரெட்டி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. அமெரிக்காவிலும் இந்த படம் ரிலீஸ் ஆன நிலையில் அங்குள்ள ஒரு தியேட்டரில் பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் படத்தை கொண்டாட்டமாக பார்த்துள்ளனர். வழக்கம் போலவே சோஷியல் மீடியாவில் இந்த படம் ட்ரோல் செய்யப்பட்டாலும், பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் படத்தை பெரியளவில் ஹிட் ஆக்கியுள்ளனர்.

இப்போது பாலகிருஷ்ணா தன்னுடைய அடுத்த ஆக்‌ஷன் அவதாரத்துக்கு தயாராகிவிட்டார். அவரின் 108 ஆவது படத்தை இயக்குனர் அனில் ரவிபுடி இயக்க உள்ளார். இந்த படத்தில் நான்கு ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வளர்ந்து வரும் நடிகையான ஸ்ரீலீலா பாலகிருஷ்ணாவின் தங்கையாகவும், பாலகிருஷ்ணாவின் ஜோடியாக காஜல் அகர்வாலும் நடிக்க உள்ளனர். மற்ற இரு முக்கிய வேடங்களில் ஹனி ரோஸ் மற்றும் பிரியங்கா ஜவால்கர் ஆகியோர் நடிக்க உள்ளனர்.