ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 1 ஏப்ரல் 2023 (14:38 IST)

எங்கள் நாட்டிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களை மீட்போம்-உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

எங்கள் நாட்டிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களை மீட்போம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

உக்ரைன் நாட்டின் மீது ரஷிய ராணுவ போர் தொடுத்து  1 ஆண்டு நிறைவடைந்துள்ளது. ரஷியாவுக்கு எதிராக உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கு உலக நாடுகள் நேட்டோ கூட்டமைப்பும், உக்ரைன் நாட்டிற்கு நிதியுதவியும், ஆயுதத் தளவாடங்களும் அளித்து உதவி வருகின்றன. இதனால், உக்ரைன் நாடு, வல்லரசான ரஷியாவுக்கு எதிராகப் போரிட்டு, பதிலடி கொடுத்து வருகிறது

இந்த  நிலையில், உக்ரைன் போர் தொடங்கி 400 நாட்கள் நிறைவடைந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ‘இந்தப் போரில் உக்ரைன் வெற்றி பெறும். எங்கள் நாட்டிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களை மீட்போம்.  நீதியை மீட்டு வெற்றி பெறுவோம்.

ஆக்ரமிப்புக்கு எதிராக எங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் நடந்து வருகிறது.  உக்ரைனுக்கு உதவி வருபவர்கள், வலுப்படுத்தியவர்கள் என அனைவரும் ஒன்றிந்து செயல்படுவோம்’ என்று தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் இருந்து ஆக்ரமிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரஷிய அதிபர் புதின் நேரில் சென்று பார்வைவிட்டது குறிப்பிடத்தக்கது.