செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (19:11 IST)

தமிழில் டப் செய்யப்படுகிறது ’அகண்டா’: விரைவில் ரிலீஸ்

aganda
பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் ’அகண்டா’
 
தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியை இந்த படம் பெற்றது என்பதும் 60 கோடியில் தயாரான இந்த திரைப்படம் 150 கோடி வசூல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படத்தை தமிழில் டப் செய்யும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது அந்த பணி முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் ஓடிடி மற்றும் தொலைக்காட்சியில் இந்த படம் ஒளிபரப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
 பாலகிருஷ்ணா ஜெகபதிபாபு ஸ்ரீகாந்த் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது