1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : செவ்வாய், 3 நவம்பர் 2020 (13:04 IST)

நேற்று எதிரி, இன்று தோழி: சனம்ஷெட்டிக்கு பாலாஜி திடீர் ஆதரவு

நேற்று எதிரி, இன்று தோழி: சனம்ஷெட்டிக்கு பாலாஜி திடீர் ஆதரவு
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களான பாலாஜி மற்றும் சனம்ஷெட்டி கடந்த சில நாட்களாகவே ஒருவருக்கொருவர் மோதி வருகின்றனர் என்பது தெரிந்ததே. குறிப்பாக நேற்று இருவரும் உச்ச கட்டமாக மோதிக் கொண்டனர் என்பதும் ஒருவரை ஒருவர் மரியாதை இல்லாமல் பேசிக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
எனவே இனிவரும் நாட்களில் இருவரும் ஒன்றிணைய வாய்ப்பே இல்லை என்று கருதப்பட்டது. இந்த நிலையில் இன்றைய நீதிமன்ற டாஸ்க்கில் சனம் ஷெட்டி மீது வழக்கு தொடுத்த பாலாஜி அவர் மீது ஆவேசமாக குற்றம் சாட்டினார்
 
ஆனால் அடுத்த வழக்கில் சுரேஷ் மற்றும் சனம்ஷெட்டிக்கு இடையே நடந்தது. இந்த வழக்கில் திடீரென சனம்ஷெட்டிக்கு ஆதரவாக பாலாஜி வாதாடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்றுவரை எதிரியாக இருந்த சனம்ஷெட்டிக்கு திடீரென பாலாஜி ஆதரவாக வாதாடியது குறித்து அர்ச்சனாவிடம் விளக்கமளித்த பாலாஜி, ‘தோற்றுக் கொண்டு இருப்பவர்களுக்கு ஆதரவு கொடுத்து ஜெயிக்க வைப்பது தான் ’கெத்து’ எனக் கூறியது அர்ச்சனாவுக்கும் சற்றே அதிர்ச்சியை ஏற்படுத்தியது