1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 28 அக்டோபர் 2020 (17:28 IST)

அம்பானி குடும்பத்தினருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

அம்பானி குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள இசட் பிளஸ் பாதுகாப்பை நீக்க வேண்டுமென்ற மனுவில் உச்சநீதிமன்றம் பதிலளித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் இந்த மனுவை ஹிமான்ஷு அகர்வால் என்பவர் தாக்கல் செய்தார். அவரது மனுவில் அம்பானி குடும்பத்தினரால் பணம் செலவு செய்யமுடியும். அதனால் அவர்களுக்கு அரசு சார்பில் பாதுகாப்பு அளிக்க தேவையில்லை எனக் கூறியிருந்தார். இதே மனுவை அவர் மும்பை உயர்நீதிமன்றத்திலும் தொடர்ந்திருந்தார். ஆனால் மனுவை அந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து இப்போது உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.

இப்போது உச்சநீதிமன்றமும் பாதுகாப்பை நீக்கக் கோரி மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது எனக் கூறியுள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிப்பதை உறுதிசெய்வது அரசின் கடமையாகும் எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.