1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Modified: வெள்ளி, 22 டிசம்பர் 2017 (15:24 IST)

பாகுபலி 2 படத்தைப் பின்னுக்குத் தள்ளிய விக்ரம் வேதா!

மிகவும் புகழ்பெற்ற திரைப்பட இணையத்தளமான ஐஎம்டிபி(IMDb-Internet movie Database) நிறுவனம் 2017-ல் வெளிவந்த படங்களில் சிறந்த இந்தியப் படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட பாகுபலி 2 படத்தைப் பின்னுக்குத் தள்ளி விஜய் சேதுபதி, மாதவன் நடித்த விக்ரம் வேதா திரைப்படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அத்தோடு இல்லாமல் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படம் 9-வது இடத்தைப் இடத்தைப் பிடித்து தமிழ்த் திரையுலகிற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது. ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் நடிப்பில் வெளியான படங்கள் வியாபார ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெறவில்லை.

IMDb வெளியிட்டுள்ள பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்த படங்களின் பட்டியலை கீழே பார்ப்போம்.
 
1. விக்ரம் வேதா 
2. பாகுபலி 2 
3. அர்ஜூன் ரெட்டி
4. சீக்ரெட் சூப்பர்ஸ்டார்
5. ஹிந்தி மீடியம் 
6. தி காஸி அட்டாக் 
7. டாய்லெட் ஏக் பிரேம் கதா
8. ஜாலி எல்எல்பி 2 
9. மெர்சல் 
10. தி கிரேட் ஃபாதர்