திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 19 டிசம்பர் 2017 (16:08 IST)

சவுதிக்கு நிகரான தண்டனை: சீனாவின் அதிரடி!!

சவுதி அரேபிய நாடு குற்றம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதில் பெயர் பெற்றது. ஆண், பெண் என்ற பாகுபாடின்றி தண்டனை வழங்க்கப்படும். இந்த பட்டியலில் தற்போது சீனாவும் சேர்ந்துள்ளது.
 
சமீபத்தில் சீனாவில் உள்ள விளையாட்டு அரங்கம் ஒன்றில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். இந்த கூட்டம் நிகழ்ச்சிக்காகவோ, திருவிழாக்காகவோ கூடியது அல்ல குற்றவாளிகக்கு மரண தண்டனை வழங்குவதை காணவே இந்த கூட்டம் கூடி இருந்தது. 
 
ஆம், சீனாவில் குவாங் டாங் மாகாணத்தில் மட்டும் கடந்த 10 மாதங்களில் 10.4 டன் அளவுக்கு போதைமருந்து போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய சுமார் 16,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிகிறது. 
 
இதில் முக்கிய குற்றாவாளிகள் 10 பெருக்கு மக்கள் முன்னிலையில் மரண தண்டனை வழங்க்கப்பட்டது. விளையாட்டு அரங்கத்திற்குள் போலீஸ் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுடன் குற்றவாளிகளும் வரவழைக்கப்பட்டனர். 
 
கைவிலங்கிட்டபடி அழைத்துவரப்பட்ட இந்த குற்றவாளிகளை பொதுமக்கள் பார்க்கும்படி நிறுத்தப்பட்டு, அவர்களின் குற்றங்களையும் தண்டனையையும் விவரித்து, தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த நிகழ்வால் போதைமருந்து கும்பலுக்கு ஒரு பாடமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதற்காக சீன அரசு விளையாட்டு அரங்கத்தின் உள்ளேயும் வெளியேயும் பதாகைகள் மற்றும் போஸ்டர்களை வைத்து தண்டனையை நிரைவேற்றியுள்ளது.