வேற லெவல் சகோ - அயலான் பாடல் வெளியானது!
சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு அயலான் படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடல் வெளியாகிவுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமார் இயக்கி வரும் அயலான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வேடத்தில் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படம் இந்த ஆண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனிடையே சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இப்பத்தில் முதல் பாடல் வெளியாகிவுள்ளது.
ஆம், ஏ.ஆர்.ரகுமான் இசையில் வேற லெவல் சகோ என்ற பாடல் வெளியாகிவுள்ளது. இதனை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.