திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 8 ஜனவரி 2024 (07:20 IST)

அயலான் இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா… கண்டுபிடிச்ச நெட்டிசன்ஸ்

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் யோகி பாபு நடிப்பில் இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ‘அயலான்’ திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி இப்போது ரிலீஸ் கட்டத்தை எட்டியுள்ளது.

பல கட்ட தாமதங்களுக்கு பிறகு இப்போது ஒருவழியாக பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 11 ஆம் தேதி அயலான் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.

இந்நிலையில் அயலான் திரைப்படத்தின் காட்சிகளை வைத்து இப்போது அது எந்த படத்தின் காப்பி என்பது குறித்து ரசிகர்கள் விவாதிக்க தொடங்கியுள்ளனர். இந்த படம் 2012 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான பால் என்ற படத்தின் காப்பி எனக் கூறி வருகின்றனர். இரு படங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ள ஏலியன்களும் ஒரே மாதிரியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.