1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 15 டிசம்பர் 2022 (12:15 IST)

நாளை முதல் ‘அவதார் 2’: 52,000 திரையரங்குகளில் ரிலீஸ்!

Avatar
பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான அவதார் 2 என்ற திரைப்படம் நாளை முதல் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் 52 ஆயிரம் திரையரங்குகளில் பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
 கடந்த 2009 ஆம் ஆண்டு அவதார் திரைப்படம் வெளியான நிலையில் இந்த படம் செய்த வசூல் சாதனையை இன்னும் வேறு எந்த படமும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் 280 கோடி அமெரிக்க டாலர்களை வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் 13 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தமிழ் உள்பட பல இந்திய மொழிகளிலும் ஆங்கிலம் உட்பட பல வெளிநாட்டு மொழிகளில் இந்த படம் வெளியாக இருப்பதாகவும் மொத்தம் 160 மொழிகளில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த நிலையில் இந்த படம் இந்தியா உள்பட உலகம் முழுவதும் 52 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Mahendran