1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 14 டிசம்பர் 2022 (18:11 IST)

இசையமைப்பாளராக அறிமுகமாகும் மிஷ்கின்.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்

myskin
தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கும் நிலையில் அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன் வெளியாகிய இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின் அஞ்சாதே, பிசாசு உள்பட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் மிஷ்கின்
 
இந்த நிலையில் டெவில் என்ற படத்தின் மூலம் இயக்குனர் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இயக்குனர் மிஷ்கினின் சகோதரரும் இயக்குனருமான ஆதித்யா இயக்கத்தில் டெவில் என்ற திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது

 
Edited by Mahendran