செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 8 ஜூலை 2022 (19:14 IST)

பிரபல இயக்குனரை சந்தித்த அர்ஜூன் மற்றும் ஐஸ்வர்யா அர்ஜூன்!

arjun
தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் அர்ஜூன். இவர், நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ஹீரோ படத்தில் அவருக்கு வில்லனாக நடித்திருந்தார்.

இந்த  நிலையில், தற்போது, இவர், தனது மகள் ஐஸ்வர்யாவை வைத்து ஒரு தெலுங்குப் படத்தில் ஹீரோயினாக நடிக்கவைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஷ்வக் சேன் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்திற்கு கே.ஜி.எப். படத்திற்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார்.
arjune aiswarya

இப்படத்தைல் அர்ஜூனே தயாரித்துள்ளதால் இப்படத்திற்கும் மேலும் அதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், சலங்கை ஒலி படத்தை இயக்கிய பிரபல தெலுங்கு சினிமா இயக்குனர் கே.விஸ்வனாத் மற்றும் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் தந்தையுமான  கிருஷ்ணாவை அர்ஜூன் மற்றும் அவரது மகள் இருவரும் சந்தித்தனர். அப்போது, ஐஸ்வர்யா அவர்கள் இருவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்.

தமிழில் ஏற்கனவே ஐஸ்வர்யா அர்ஜூன் விஷால் நடிப்பில் உருவான பட்டத்துயானை படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படம் குறித்த தகவல்கள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தன என்பதும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் உருவாக்கத்தில் உள்ளது.