வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (14:00 IST)

கொரோனா பாதிப்பால் ஒத்தி வைக்கப்பட்ட விஜய்சேதுபதியின் பாலிவுட் படம்!

கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு திரைப்பட படப்பிடிப்புகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் விஜய் சேதுபதி நடிக்க இருந்த பாலிவுட் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
விஜய் சேதுபதி மற்றும் காத்ரீனா கைப் நடிக்க உள்ள பாலிவுட் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 15 முதல் ஆரம்பமாக இருந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் படப்பிடிப்பு தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
விஜய் சேதுபதி, காத்ரினா கைப் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கவுள்ள இந்த படத்தின் டைட்டில் ’மேரி கிறிஸ்மஸ்’ என டைட்டில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி சமயத்தில் காத்ரினா கைப் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்தார் என்பதும் தற்போது அவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது