வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 10 ஏப்ரல் 2019 (11:30 IST)

ஐ.பி.எல் பார்க்க வந்த அட்லீயின் ஜாக்கட் விலை கேட்டா ஆடிப்போவீங்க!

சமீபத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங் அணியும்,  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும்  களத்தில் இறங்கி விளையாடியது.  அப்போது இயக்குனர் அட்லீ  தன் மனைவி பிரியாவுடன் நடிகர் ஷாருக்கான் அருகில் அமர்ந்திருக்கும் புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளத்தில் அதிக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. 

அப்போது அவர் அணிந்துவந்த கருப்பு உடையில் அவரது நிறம் இன்னும் டார்க்காக தெரிந்தது. இதனால் அவரது நிறத்தை கிண்டலடித்து பல மீம்கள் வந்தாலும் சிலர், தமிழ் சினிமாவில் மூன்றே படம் இயக்கிய ஒரு இயக்குனர், இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டாருடன் அமர்ந்து மேட்ச் பார்ப்பதுயெல்லாம் அவர் உழைப்பின் வளர்ச்சியே,  எனவே ஒருவரின் உருவத்தையும் அவரின் நிறத்தையும் வைத்து எடைபோடுவதற்கு  முன் அவர் வெற்றியின் உயரத்தை நினைத்துப்பாருங்கள் என சிலர் அட்லீக்கு ஆதரவாக பேசுவருகின்றனர்.
 
மேலும் நேற்று அட்லீ அணிந்து வந்திருந்த கருப்பு நிற ஜாக்கட் விலை நம்மில் பலரின் மாத வருமானமாகவே  இருக்கும் என்று கூறி சிலர் அட்லீயை கலாய்ப்பவர்களுக்கு பதிலடி கொடுத்தனர். 
 
சரி, அப்படி அந்த ஜாக்கட் விலை என்ன என்று தேடி பார்த்தபோது தான் தெரியவந்தது. அந்த ஜாக்கட்டின் விலை இந்திய ரூபாயின் மதிப்புபடிரூ 17,000. எனவே, அட்லீ மட்டுமில்லாமல் அடுத்தவர்களின் நிறத்தை கிண்டலடிப்பவர்கள் இவ்வளவு இளம் வயதிலே வாழ்வில் எந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறார்கள் என்பதையும்  நினைத்து பாருங்கள் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.