1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 10 டிசம்பர் 2024 (13:04 IST)

விஜய், ஷாருக் கானுக்கு நன்றி தெரிவித்த அட்லீ…!

கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான திரைப்படம் ’தெறி’. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் ஹிந்தியில் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தை அட்லி மற்றும் இன்னொரு பாலிவுட் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.

அட்லியின் உதவி இயக்குனர்களில் ஒருவரான காலிஸ் என்பவர் இயக்கி வரும் இந்த படத்தில் விஜய் நடித்த வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கிறார். இந்த படத்தின் நாயகிகளாக கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி ஆகியோர் நடித்துள்ளனர். ஏற்கனவே ஷூட்டிங் முடிந்த நிலையில் சல்மான் கான் நடித்த ஒருக் காட்சியை சமீபத்தில் படமாக்கி இணைத்தனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது.

அதில் கலந்துகொண்டு பேசிய அட்லீ தன்னுடைய இந்த நிலைக்கு விஜய் மற்றும் ஷாருக் கான் ஆகிய இருவரும் முக்கியக் காரணம் என நெகிழ்ச்சியோடு பேசியுள்ளார். அவரது பேச்சில் “ஷாரு கான் சார் இல்லை என்றால் நான் இந்தியில் படமே பண்ணியிருக்க மாட்டேன். ஆனால் இப்போது நான் இந்தியில் படமே தயாரிக்கிறேன். அதற்கு அவர்தான் காரணம்” எனக் கூறியுள்ளார்.