சந்தானம் பிறந்த நாளில் அட்லி கொடுக்கும் இன்ப அதிர்ச்சி!
சந்தானம் நடித்த ’டகால்டி’ மற்றும் ’சர்வர் சுந்தரம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஜனவரி 31ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த இரண்டு படங்களின் புரமோஷன்களும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தாலும் கடைசி நேரத்தில் ’சர்வர் சுந்தரம்’ திரைப்படம் பின்வாங்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் ’டகால்டி’ படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை நாளை பிரபல இயக்குனர் அட்லி தனது டுவிட்டரில் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு அட்லி அறிவிக்க இருக்கும் இந்த அறிவிப்பு அனைவருக்கும் ஆச்சர்யம் தரத்தக்க வகையில் இருக்கும் என்றும் படக்குழுவினர் விளம்பரப்படுத்தி உள்ளனர். அப்படி என்ன முக்கிய அறிவிப்பு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
சந்தானம் முதல்முறையாக இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளதாகவும், அதில் ஒரு வேடம் மும்பையில் வாழும் தமிழ்ப்படம் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் நாயகியாக பிரபல பெங்காலி நடிகை ரித்திகாசென் நடித்துள்ளார். இந்த படத்தில் யோகி பாபு, சந்தானத்துடன் இணைந்துள்ளதால் நான்ஸ்டாப் காமெடிக்கு இந்த படம் உத்தரவாதம் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.