செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Modified: வெள்ளி, 10 ஜனவரி 2020 (18:48 IST)

"கொத்தா கொத்துது போத" டகால்டி படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ்!

காமெடியனாக அறிமுகமாகி ஹிரோவாக புரமோஷன் ஆகி வெற்றி பெற்ற நடிகர்களில் ஒருவர் சந்தானம். இவர் ஹீரோவாக நடித்த 'தில்லுக்கு துட்டு', 'சக்க போடு போடு ராஜா', 'தில்லுக்கு துட்டு 2' போன்ற படங்கள் நல்ல வசூலை பெற்றுத்தந்தன. 
 
தற்போது சந்தானம் விஜய் ஆனந்த் டகால்டி படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தை 18 ரீல்ஸ் சார்பாக எஸ்.பி.சௌத்ரி தயாரித்துள்ளார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக ரித்திகா சென் என்பவர் நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் யோகி பாபு, ரித்திகா சென், ராதாரவி, தருண் அரோரா, சந்தான பாரதி, மனோ பாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
 
இந்நிலையில் தற்போது இப்படத்திலிருந்து "கொத்தா கொத்துது போத"  என்ற பாடலின் லிரிக் வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன்,  கோவிந்த் வாந்தா பாடியுள்ள இப்பாடலுக்கு சுப்பு பாடல் வரிகளை எழுதியுள்ளார்.