திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 9 ஜனவரி 2020 (21:23 IST)

சந்தானத்திற்காக இணைந்த மூன்று இசையமைப்பாளர்கள்

முதல் முறையாக சந்தானம் இரண்டு வேடங்களில் நடித்து வரும் டகால்டி. என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கியுள்ளன 
 
சமீபத்தில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் நாளை மாலை 5 மணிக்கு இரண்டாவது சிங்கிள் பாடலை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் 
 
இந்த பாடலை சந்தோஷ் நாராயணன் மற்றும் கோவிந்த் வசந்தா ஆகிய இரண்டு பிரபல இசையமைப்பாளர்கள் இணைந்து பாடியுள்ளனர் என்பதும், இந்த பாடலை இந்த படத்தின் இசை அமைப்பாளர் விஜய் நரேன் என்பவர் கம்போஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த பாடலுக்காக மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்து உள்ளனர் 
 
சந்தானம் ஜோடியாக பெங்காலி நடிகை ரித்திகாசென் நடித்துள்ள இந்த படத்தில் முக்கிய வேடத்தில் யோகி பாபு என்பது குறிப்பிடத்தக்கது. யோகி பாபு மற்றும் சந்தனம் ஆகிய இருவரும் இந்த படத்தில் இணைந்திருப்பதால் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
விஜய் ஆனந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தை தீபக் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார் சுரேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது