ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 29 ஜூன் 2024 (15:45 IST)

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 2 நாள் வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு..!

பிரபாஸ் நடித்த ’கல்கி 2898 ஏடி’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாக நிலையில் முதல் நாளில் இந்த படம் 191.5 ரூபாய் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தது. 
 
இதனை அடுத்து நேற்று இரண்டாவது நாளிலும் இந்த படம் நல்ல வசூல் செய்துள்ள நிலையில் இந்த இரண்டு நாட்களிலும் சேர்ந்து இந்த படத்திற்கு மொத்தம் 298.50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.. 
 
இந்த இரண்டு அறிவிப்புகளும் தயாரிப்பு நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இரண்டே நாட்களில் ’கல்கி 2898 ஏடி’ திரைப்படம் சுமார் ரூ.300 கோடிக்கு சாதனை செய்துள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 600 கோடி ரூபாய் என்று கூறப்படும் நிலையில் இரண்டே நாட்களில் 300 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள நிலையில் சனி ஞாயிறு ஆகிய இரண்டு விடுமுறை தினங்களில் எத்தனை கோடி வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
Edited by Mahendran