புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வியாழன், 11 அக்டோபர் 2018 (10:18 IST)

அட்ஜஸ்ட் செய்ய மறுத்ததால் 3 பட வாய்ப்புகளை இழந்தேன்: அதிதி ராவ்

நடிகை அதிதி ராவ் ஹைதரி அட்ஜஸ்ட் செய்ய மறுத்ததால் 3 படங்கள் கைவிட்டு போனதாக பகீர் கிளப்பியுள்ளார். 
 
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையில் அதிகமாக உள்ளதாக திரையுலகினர் பலர் கூறி வருகிறார்கள். 
 
#MeToo என்ற ஹேஸ்டேக்கில் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவுகளை, அண்மைக்காலமாக பெண்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக நடிகைகள், திரையுலகினர், மீடியாக்களில் உள்ள பெண்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
 
இந்நிலையில் இயக்குனர் மணிரத்தினத்தின் காற்று வெளியிடை மற்றும் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்துள்ள அதிதி ராவ் ஹைதரி தான் அட்ஜஸ்ட் செய்ய மறுத்ததால் 3  படங்கள் கைவிட்டு போனதாக  கூறி உள்ளார்.
 
இது குறித்து அவர் கூறியதாவது:-
வாரிசு நடிகர்கள், நடிகைகளை விட வெளியே இருந்து வருபவர்களுக்கு பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படும் கொடுமை அதிகம் நடக்கிறதா என்று என்னால் சொல்ல முடியாது. என்னை பற்றி மட்டும் தான் பேச முடியும். புதிதாக சினிமா துறைக்கு வந்து கொள்கையுடன் செயல்படுவது கஷ்டம், ஆனால் முடியாத காரியம் இல்லை. அதற்கு நான் தான் உதாரணம்.
 
அட்ஜஸ்ட் செய்ய மறுப்பதால் வாய்ப்புகள் குறையும். இருப்பினும் என் கொள்கைகளை நான் மாற்றிக் கொள்வதாக இல்லை. நான் நடிக்க வந்த புதிதில் ஒரு மோசமான அனுபவம் ஏற்பட்டது. 3 படவாய்ப்புகள் வந்தும்  அட்ஜஸ்ட் பண்ண மறுத்ததால் அதில் இருந்து வெளியே வந்துவிட்டேன். என்னை கவுரவத்துடன் வாழ வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து வளர்த்துள்ளனர்.
 
எனக்கு கண்ணியம், கவுரவம் தான் முக்கியம். அதற்காக பட வாய்ப்புகளை இழந்தாலும் பரவாயில்லை. அதேநேரம் சினிமா துறை பெண்களுக்கு பாதுகாப்பற்ற இடம் என்று பொதுவாக கூற முடியாது என்றார்.