திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 10 அக்டோபர் 2018 (11:14 IST)

பாலியல் தொல்லை பற்றி தொகுப்பாளினி பாவனா ஓபன் டாக்

பாலியல் தொல்லைகள் பற்றி தொகுப்பாளி பாவனா அவர் பணிபுரிந்த பிரபல தனியார் தொலைக்காட்சி பற்றி அதிரடி கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்தி பட உலகில் தொடர்ந்து தமிழ் சினிமா வரையில் பல நடிகைகள் சினிமா வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக பலரிடம் பாலியல் தொல்லையில் சிக்கியுள்ளார்கள். பல அடுத்தடுத்த திடுக்கிடும் தகவல்களை பெண்கள் தைரியமாக பேச தொடங்கிவிட்டனர்.  
 
சமீபத்தில் தமிழ் சினிமாவில் பாடகி சின்மயி தான் அனுபவித்த பாலியல் தொல்லை குறித்து தெரிவித்ததை தொடர்ந்து தற்போது மற்ற சினிமா பிரபலங்களும் தைரியமாக வெளியே சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.
 
சின்மயிக்கு அடுத்ததாக பிரபல தனியார் தொலைக்காட்சியின் தொகுப்பாளினி பாவனா, MeTooIndia டாக்கில் இப்போது தான் பெண்கள் தைரியமாக பேச வெளியே வருகின்றனர் என்றும், இதை பார்க்கும் போது நான் வேலை செய்த விஜய் தொலைக்காட்சி மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் இருப்பவர்களுக்கு நன்றி, நான் அப்படி ஒரு துன்பத்தையும் அனுபவிக்காமல் நிம்மதியாக வேலை செய்தேன் என பதிவு செய்துள்ளார்.