புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 10 அக்டோபர் 2018 (08:30 IST)

வைரமுத்து காலில் விழுந்து ஆசி வாங்கிய சின்மயி

பாடகி சின்மயி சமீபகாலமாக தனக்கும் தன்னை சேர்ந்த பெண்களுக்கும் நடந்த பாலியல் தொந்தரவுகள் குறித்த தகவல்களை தனது டுவிட்டர் இணையதளத்தில் பதிவு செய்து வருகிறார். குறிப்பாக அவர் பாடலாசிரியர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சின்மயி தன்னுடைய திருமணத்தில் க்லந்து கொண்ட வைரமுத்துவிடம் காலில் விழுந்து ஆசி வாங்கிய வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 2005ஆம் ஆண்டு முதல் வைரமுத்துவின் இன்னொரு முகம் தனக்கு தெரியும் என்று கூறி வரும் சின்மயி, 2014ஆம் ஆண்டு நடந்த திருமணத்தின்போது காலில் விழுந்து ஆசி பெற்றது முரண்பாடாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்தவர் என்று தெரிந்தும் காலில் விழுந்து ஆசி வாங்கியது ஏன்? என்ற கேள்வியை நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர். இதற்கு சின்மயி என்ன பதில் சொல்ல போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்