ஓடிடியில் ஆர்யாவின் அடுத்த படம்: உறுதி செய்யப்பட்ட தகவல்!
ஆர்யாவின் அடுத்த படம் ஓடிடியில் ரிலீஸ் செய்ய உள்ளதாக உறுதி செய்யப்பட்ட தகவல் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஆர்யா மற்றும் அவருடைய மனைவி சாயிஷா ஆகிய இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் டெடி. இந்தப் படத்தை சக்தி சவுந்தர் ராஜன் என்பவர் இயக்கியிருந்தார். நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் உள்ளிட்ட படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் அடுத்த படம்தான் இது டெடி. டெடி என்ற அனிமேஷன் கேரக்டர் இந்த படத்தில் முக்கிய கேரக்டராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்று முன்னர் ஹாட்ஸ்டார் ஓடிடியில் டெடி திரைப்படம் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மார்ச் 19ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்யாவின் அடுத்த ஓடிடியில் ரிலீஸ் செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்