புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 13 பிப்ரவரி 2021 (14:30 IST)

13 கிலோ எடை குறைத்து, அழகாய் மின்னும் ஐஸ்வர்யா தத்தா - ஏன் தெரியுமா?

நடிகை ஐஸ்வர்யா தான் நடிக்கும் “SSHHH” ஆந்தாலஜி படத்தின் கதாபாத்திரத்திற்காக புதியதோர் உச்சத்தை தொட்டுள்ளார். 
 
படங்களின் கதாப்பாத்திரத்திற்காக நடிகர்கள் உடல் எடையை குறைப்பதையும், கூட்டுவதையும் நாம் அறிந்திருப்போம். ஆனால், நடிகைகள் அவ்வாறு செய்வதெல்லாம் மிகவும் குறைவு. இந்த விதியினை உடைத்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா தத்தா. 
 
திரைத்துறை மீதான காதல் மற்றும் அர்ப்பணிப்பின் காரணமாக  SSHHH படத்தில் தான் ஏற்று நடிக்கும் பாத்திரத்தின் தன்மைக்காக 13 கிலோ உடல் எடையினை குறைத்து புத்தம் புது பொலிவுடன் தோற்றமளிக்கிறார். 
 
பிக்பாஸ் மூலம் புகழடைந்த அவர், தற்போது தமிழில் நாயகியாக  7 படங்களில் நடித்து வருகிறார். பிக்பாஸ் வின்னர் ஆரி நடிக்கும் அலேகா, PUPG, கூடவன், கன்னி தீவு, கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, பாலாஜி மோகன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் தலைப்பிடாபடாத படம் மற்றும் மிளிர் முதலான படங்களில் நடித்து வருகிறார்.  
 
ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமான கதைகளங்களில் முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்துடன் அமைந்திருக்கின்றன.  இப்படங்கள் தன் திரைவாழ்வின் முக்கியமான படங்களாக,  திருப்புமுனை தருமென பெரும் நம்பிக்கையில் உள்ளார்.