புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 5 ஜூலை 2020 (16:41 IST)

ஓடிடியில் ரிலிஸாகும் ஆர்யா படம் – பேச்சுவார்த்தையில் நம்பிக்கை!

ஆர்யா மற்றும் சாயிஷா இணைந்து நடித்துள்ள டெடி படத்தினை ஓடிடி யில் ரிலிஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

சக்தி செளந்தராஜன் இயக்கத்தில் ஆர்யா சாயிஷா முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடித்து வரும் ’டெடி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் விறு விறுப்பான "டீசர்" வீடியோ சில மாதங்களுக்கு முன் யூடியூபில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்த படம் ரிலீஸுக்கு தயாராகி இருந்த வேளையில் கொரோனா ஊரடங்கால் திரையரங்கங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் இப்போது இந்த படத்தை ஓடிடியில் நேரடியாக ரிலிஸ் செய்ய அதன் தயாரிப்பு நிறுவனம் முன்னணி ஓடிடி நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. திருமணத்துக்குப் பின்னர் ஆர்யா மற்றும் சாயிஷா ஆகியோர் இணைந்து நடித்துள்ளதால் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

டெடி படத்தில் சதீஷ், கருணாகரன், மசூம் ஷங்கர், இயக்குநர் மகிழ் திருமேனி, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.