வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 27 மார்ச் 2023 (15:22 IST)

மனைவிக்கு ஐட்டம் டான்ஸ் ஆட வாய்ப்பு வாங்கி கொடுத்த ஆர்யா!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஆர்யா,  2005ஆம் ஆண்டு விஷ்ணுவர்த்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ஓரம் போ, நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், சிக்கு புக்கு, வேட்டை, சேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம் உள்ளிட்ட 25க்கும் மேல்பட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார். 
 
அதன் பின்னர் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியாகி  நல்ல வரவேற்பை பெற்ற 'வனமகன்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமான நடிகை சாயிஷாவை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். 
 
தொடர்ந்து இருவரும் திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் சயீஷா சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல ஐட்டம் பாடல் ஒன்றிற்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார். இது பேசிய சயீஷா பத்து தல படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஆர்யாவிடம்  'நான் ஒரு பாடல் எடுக்க போகிறேன், அதற்கு நடிகை தேடிக்கொண்டிருக்கிறேன்' என கூறியுள்ளார். 
 
அப்போது ஆர்யா 'சாயிஷாவிடம் கேளுங்கள்' என கூறி மனைவி சாயிஷாவுக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்து இருக்கிறார். அதன் பின்னர் படக்குழு எதிர்பார்த்ததை விட நன்றாக டான்ஸ் ஆடியதற்காக சாயிஷாவுக்கு ரூ . 40 லட்சம் ருபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது.