வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 24 மார்ச் 2023 (12:25 IST)

எல்லாம் சிம்புவுக்காக தான் - ஐட்டம் டான்ஸ் ஆடியதை குறித்து மனம் திறந்த சயீஷா!

கோலிவுட் சினிமா உலகில் உள்ள பல நடிகைகளுடன் கிசு கிசுக்கப்பட்டு தமிழ் சினிமாவின் பிளேபாய் என்று எல்லோரலும் அழைக்கப்பட்டு வந்த நடிகர் ஆர்யா. இவர் கஜினிகாந்த் படத்தில் ஜோடியாக நடித்த சயீஷாவை ஓட்டுவழியா காதலித்து திருமணம் செய்துகொண்டார். 
 
அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். குழந்தை பிறப்புக்கு பின்னர் சில வருடம் நடிப்பில் இருந்து ஒதுங்கியிருந்த சயீஷா சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல படத்தில் அடாவடி என்ற ஐட்டம் பாடல் ஒன்றிற்கு ஆட்டம் போட்டுள்ளார். இப்போ இது தேவையா? என பலரும் அவரை விமர்சித்தனர். 
 
இது குறித்து முதன் முறையாக பேசியுள்ள சயீஷா, “ எனக்கு மிகவும் பிடித்ததை செய்வதர்க்கு நான் மீண்டும் வந்து விட்டேன். அது நடனம் தான். பத்து தல படத்தில் உள்ள இந்த அற்புதமான பாடலை ஏ.ஆர்.ரகுமான் பிரமாதமாக இசையமைத்திருக்கிறார்.
 
 “பத்து தல” படம் வரும் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படம் உங்களுக்கு பிடிக்கும் ஏற்று நம்புகிறேன் என பதிவிட்டு அதனுடன் “அடாவடி” பாடலின் போஸ்டரையும் பதிவிட்டிருக்கிறார். இது எல்லாம் சிம்பு என்ற பிராண்டிற்காக தான் என்கிறார்கள் ரசிகர்கள்.