புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 11 மே 2018 (19:26 IST)

மணிரத்னம் படத்தை முடித்து கொடுத்த ஹீரோ...

மணிரத்னம் தற்போது செக்க சிவந்த வானம் படத்தை இயக்கிவருகிறார். மணிரத்னம் இயக்கும் படங்கள் அதிக நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என்று கோலிவுட்டில் பேச்சு உண்டு. 
 
இதனை தனது கடந்த 2 படங்கள் மூலம் (ஓகே கண்மணி, காற்று வெளியிடை) முறியடித்துள்ளார். தற்போது செக்க சிவந்த வானம் படத்தை அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் என 4 ஹீரோக்களை வைத்து இயக்கி வருகிறார். 
 
இந்நிலையில் படத்தில் அரவிந்த் சாமி நடிக்க வேண்டிய காட்சிகள் முடிக்கப்பட்டுவிட்டதாம். இதுபற்றி அரவிந்த் சாமி தனது டுவிட்டர் கூறியுள்ளதாவது, செக்க சிவந்த வானம் படத்தில் எனது காட்சிகள் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. 
 
மணிரத்னம், சந்தோஷ் சிவன் ஆகியோருடன் பணிபுரிவது இனம் புரியாத சந்தோஷம். ஒட்டுமொத்த படக்குழுவினரையும் நான் மிகவும் நேசிக்கிறேன். இப்படம் எனக்கு நிச்சயம் ஒரு ஸ்பெஷல் படமாக இருக்கும் என எண்ணுகிறேன் என பதிவிட்டிருக்கிறார்.