திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (19:19 IST)

பேய் படம் நடிக்கவும் மாட்டேன், பார்க்கவும் மாட்டேன்: அரவிந்த் சாமி

அரவிந்த் சாமி பேய் படத்தில் நடிக்கவும் மாட்டேன், பார்க்கவும் மாட்டேன் என்று கூறியுள்ளார்.

 
 
அரவிந்த் சாமி - அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ திரைப்படம். வரும் மே 11-ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்தப் படத்துக்கு ரமேஷ் கண்ணா வசனம் எழுதியிருப்பதோடு, முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
 
இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. அதில் பேசிய நடிகர் அரவிந்சாமி, பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படம் மலையாளத்தில் இருந்து சில மாற்றங்கள் செய்து தமிழில் உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கிறது. நான் தனி ஒருவன் படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அந்த கதாபாத்திரம் போலவே எனக்கு 15 படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், நான் அந்த படங்களில் நடிக்கவில்லை. 
 
வித்தியாசமான கதைகளில் நல்ல கதாபாத்திரம் அமைந்தால் நடிப்பேன். பேய் படம் நடிக்கவும் மாட்டேன். பார்க்கவும் மாட்டேன் என்றார்.