1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 29 மார்ச் 2018 (13:53 IST)

சமாளிக்க முடியாத பொறுப்புகளை ஏன் ஏற்க வேண்டும்? கவுதம் மேனை குத்திக்காட்டிய அரவிந்த் சாமி

கார்த்திக் நரேன், கவுதம் மேனன் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு டுவிட்டரில் புயலாக வெடித்துள்ள நிலையில் தற்போது அரவிந்த சாமி கவுதம் மேனனை குத்திக்காட்டி டுவீட் செய்துள்ளார்.

 
கார்த்திக் நரேன் தற்போது இயக்கும் 'நரகாசூரன்' படத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிக்கிறார். 
 
கார்த்திக் நரேன் தனது டுவிட்டர் பக்கதில் "பலர் என்னிடம் அறிவுரை கூறினாலும் நான் உங்களை நம்பினேன். ஆனால் நீங்கள் எங்களை குப்பை போல நடத்தினீர்கள். கடைசியில் நாங்களே முதலீடு செய்யவேண்டியதாகிவிட்டது. தயவு செய்து இனி யாரையும் இப்படி ஏமாற்றாதீர்கள்" என்று டூவிட் செய்தார்.
 
இதற்கு கவுதம் வாசுதேவ் மேனம் பதில் டுவீட் செய்தார். பின்னர் கவுதம் மேனன் அதற்கு மனிப்பு கோரினார். கார்த்திக் நரேனின் டுவீட் என்னை அப்செட் செய்தது. எனவே, பதிலுக்கு நானும் டுவீட் போட்டேன். அதற்காக நரேனிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 
 
அவருக்கு நான் முழு சுதந்திரமும் கொடுத்தேன். அவர் கேட்ட நடிகைகளை நடிக்க வைத்தோம். நரகாசுரன் படத்தில் 50 சதவீத லாபத்தை நான் கேட்கவில்லை. அப்படத்தில் என் பங்கு இல்லை. படத்தை விட்டு நான் வெளியேற வேண்டும் என அவர் விரும்பினால் நான் மகிழ்ச்சி அடைவேன். 
 
சிலரின் பேச்சைக்கேட்டு நரேன் கோபமடைந்துள்ளார். படம் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும். அதை யாராலும் தடுக்க முடியாது. இன்னும் சில நாட்களில் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும். படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று கவுதம் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
 
கவுதம் மேனனின் கருத்துக்கு தற்போது அரவிந்த் சாமி பதிலடி கொடுக்கும் விதமாக டுவீட் செய்துள்ளார். எல்லாம் சரி ஆனால் பொறுப்புகளின் பட்டியலை கடைப்பிடிப்பது இல்லையே என்று கூறியுள்ளார்.
 
கவுதம் மேனன் ஒருபடம் முடியும் முன்பே அடுத்த படத்தை தொடங்குவது. அந்த படத்தை அப்படியே சில நாட்கள் கிடப்பில் போடுவது. அந்த நேரத்தில் மேலும் மற்றொரு படத்தை தொடங்குவது. இதனிடையே படங்களை தயாரிப்பது என்று பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்வது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. 
 
இதை குறிப்பிட்டு அரவிந்த சாமி கவுதம் மேனனை தாக்கி டுவீட் செய்துள்ளார்.